செய்திகள்

தக்கலை அருகே மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி

Published On 2018-11-17 17:47 GMT   |   Update On 2018-11-17 17:47 GMT
தக்கலை அருகே மர்ம காய்ச்சலுக்கு பெண் பலியானார்.
பத்மநாபபுரம்:

குமரி மாவட்டத்தில், டெங்கு, பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க சுகாதாரதுறை ஊழியர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனால், காய்ச்சல் காரணமாக நாளுக்கு நாள் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், தக்கலை அருகே மர்ம காய்ச்சலில் பெண் ஒருவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த விவரம் வருமாறு:-

தக்கலை அருகே உள்ள ஈத்தவிளை, தோட்டத்துவிளையை சேர்ந்தவர் ஈசாக். இவருடைய மனைவி செல்வி மனோகர பாய் (வயது 58). இவர் தனது மகன் ஸ்டாலின் வீட்டில் தங்கியிருந்தார். கடந்த வாரம் செல்வி மனோகரபாய் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அழகியமண்டபம், தக்கலை ஆகிய பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றார். ஆனால், காய்ச்சல் குணமாகவில்லை.

இதையடுத்து மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செல்வி மனோகரபாய் பரிதாபமாக இறந்தார்.

மர்ம காய்ச்சலில் பெண் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News