செய்திகள்

கொம்பாக்கத்தில் லாரி அதிபரிடம் கத்தியை காட்டி பணம் செல்போன் பறிப்பு - 2 வாலிபர்கள் கைது

Published On 2018-11-17 10:09 GMT   |   Update On 2018-11-17 10:09 GMT
கொம்பாக்கத்தில் லாரி அதிபரிடம் கத்தியை காட்டி பணம் மற்றும் செல்போனை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி:

வில்லியனூர் அருகே கொம்பாக்கம் பேட் புதுநகரை சேர்ந்தவர் ரத்தினவேலு (வயது56). இவர் சொந்தமாக லாரி வாங்கி ஓட்டி வருகிறார். நேற்று இரவு லாரியை மேட்டுப்பாளையம் லாரி நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.

கொம்பாக்கம் கல்லரை ரோட்டில் வந்த போது 3 வாலிபர்கள் ரத்தினவேலுவை வழிமறித்தனர். ரத்தினவேலு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இறங்கியதும் அவர்கள் 3 பேரும் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை கழுத்தில் வைத்து சட்டை பாக்கெட்டில் வைத்துள்ள பணத்தை கொடுக்குமாறு மிரட்டினர். பின்னர் அவர்கள் ரத்தினவேலுவிடம் இருந்த ரூ.6.500 ரொக்கபணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து ரத்தினவேலு வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜி ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ரத்தினவேலுவிடம் கத்தியை காட்டி பணம், செல்போனை பறித்து சென்றது வில்லியனூர் நடராஜன் நகரை சேர்ந்த பாலா என்ற பாலாஜி (வயது19), திலீப்குமார் (22) மற்றும் வி.மணவெளியை சேர்ந்த புருஷோத்தமன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து பாலாஜி மற்றும் திலீப்குமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். புருஷோத்தமனை தேடிவருகிறார்கள். கைது செய்யப்பட்ட பாலாஜி, திலீப்குமார் ஆகிய 2 பேர் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News