செய்திகள்

மெரினாவில் கொடிகட்டி பறக்கும் விபசாரம்- போலீஸ் நடவடிக்கை பாயுமா?

Published On 2018-11-05 09:31 GMT   |   Update On 2018-11-05 09:31 GMT
மெரினா கடற்கரையில் இரவு நேரத்தில் திறந்தவெளி பாராகவும், விபசார விடுதி போலவும் செயல்படுவதால் போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா? என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. #chennaimerina

சென்னை:

மெரினா கடற்கரை இரவு நேரங்களில் திறந்தவெளி பாராகவும், விபசார விடுதி போலவும் செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பறந்துவிரிந்த மெரினா கடற்கரையில் சனி, ஞாயிற்று கிழமைகளில் கூட்டம் அலை மோதும். நேற்று முன்தினமும் சனிக்கிழமை இரவு மெரினாவில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. இதுபோன்ற ஒரு சூழலில் தான் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மெரினாவில் போதுமான போலீஸ் கண்காணிப்பு இல்லாததால் அங்கு சமூக விரோத செயல்கள் அதிகம் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

குடிமகன்கள் பலர் கடற்கரை மணலில் அமர்ந்து மது குடிப்பதுடன், விபசார அழகிகளை அழைத்துச் சென்று உல்லாசமாக இருப்பதும் தெரியவந்தது. குறிப்பாக இருள் சூழந்த பகுதிகளில், பொதுமக்களின் நடமாட்டம் இருக்கும்போதே ஜோடியாக வரும் பலர் எல்லைமீறும் செயல்களில் நடந்து கொள்கின்றனர்.

மெரினா கடற்கரையையொட்டிய வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காலியாக உள்ள வீடுகளில் விபசாரம் நடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனை போலீசார் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

இதனை கட்டுப்படுத்தி, சமூக விரோத செயல்களை போலீசார் தடுக்க வேண்டும். இதுபோன்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. #chennaimerina 

Tags:    

Similar News