செய்திகள்

பெட்ரோல் விலை ரூ.84-க்கு விற்கப்பட்டது

Published On 2018-10-23 08:17 GMT   |   Update On 2018-10-23 08:17 GMT
பெட்ரோல், டீசல் விலை சென்னையில் இன்று ஆறாவது நாளாக குறைந்துள்ளது. இதனால் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.53க்கு விற்கப்பட்டது. #PetrolPrice
சென்னை:

பெட்ரோல், டீசல் விலை சென்னையில் இன்று ஆறாவது நாளாக குறைந்துள்ளது.

கடந்த 2 மாதமாக உலகளாவிய பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்தது. கச்சா எண்ணை உற்பத்தி செய்யும் நாடுகளாலும் இந்தியாவுக்கு சிக்கல் உருவானது.

இந்த தடுமாற்றங்களில் இருந்து தற்போது இந்தியா மீண்டு வருகிறது. இதன் காரணமாக பெட்ரோலியம் பொருட்களின் விலைகள் குறையத் தொடங்கியுள்ளன.

பெட்ரோல், டீசல் விலை இன்று (செவ்வாய்க்கிழமை) 6-வது நாளாக குறைந்துள்ளது. பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 11 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.53க்கு விற்கப்பட்டது. சில நிறுவனங்களின் நேரடி பங்குகளில் 84 ரூபாயாக இருந்தது.

டீசல் விலையில் இன்று லிட்டருக்கு 7 காசுகள் குறைக்கப்பட்டன. இதனால் இன்று ஒரு லிட்டர் டீசல் ரூ.79.15க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலை குறைப்பு இன்று காலை 6 மணி முதல் அமல்படுத்தப்பட்டு இருப்பதாக இந்திய எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

கடந்த 6 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.57ம் டீசல் விலை லிட்டருக்கு 89 காசுகள் குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. #PetrolPrice
Tags:    

Similar News