செய்திகள்

காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த 6 மாணவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல்

Published On 2018-10-22 17:17 GMT   |   Update On 2018-10-22 17:17 GMT
கபிஸ்தலம் பாலக்கரை அருகே காவிரியாற்றில் மூழ்கி இறந்த 6 மாணவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் துரைக்கண்ணு ஆறுதல் கூறினார்.

கபிஸ்தலம்:

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் காவிரியாற்றில் கடந்த 19-ந்தேதி நீரில் மூழ்கி இறந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் துரைக்கண்ணு, கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் ஆறுதல் கூறினர்.

கபிஸ்தலம் கிராமம், சீதா லெட்சுமிபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 17), வெங்கடேஷ் (18), விஷ்ணுபிரசாத் (13), ஸ்ரீநவீன் (14), கதிரவன் (18), சிவபாலன் (15) ஆகிய 6 மாணவர்கள் கபிஸ்தலம் பாலக்கரை அருகே காவிரியாற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி இறந்தனர். தகவலறிந்த அமைச்சர் துரைக்கண்ணு இறந்த மாணவர்களின் இல்லத்திற்கு சென்று பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். முதலமைச்சர் நிவாரண நிதி உதவித்தொகை கிடைக்கப் பெறுவதற்கு கலெக்டர் மூலமாக பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பாரதிமோகன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. ராம்குமார், பாபநாசம் தாசில்தார் மாணிக்கராஜ், முன்னாள் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர்மோகன், முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் கோபிநாதன், சூரியநாராயணன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News