செய்திகள்

பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம்

Published On 2018-09-27 15:31 GMT   |   Update On 2018-09-27 15:31 GMT
பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. #admkmeeting
பெரம்பலூர்:

பெரம்பலூரில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஈழத்தமி ழர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் சிங்க ராணுவத்திற்கு தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அரசு உதவியதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமான தி.மு.க., காங்கிரஸ் கட்சியினரை போர்க்குற்றவாளியாக அறிவித்து விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. 

கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமை தாங்கி பேசுகையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தபோது கடந்த பார்லிமெண்ட், சட்டசபை தேர்தல்களில் தனித்து நின்று வெற்றி பெற்றார். அதேபோல் வரும் பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தலில்களில் தி.மு.க. தனித்து நின்று போட்டியிட தயாரா? அதற்கு அந்த கட்சிக்கு திராணி உள்ளதா என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி சாவல் விட்டார்.

அண்ணா தொழிற்சங்க பேரவை கன்வீனர் ஜக்கையன் எம்.எல்.ஏ. பேசுகையில், இலங்கையில் நடந்த போரில் ஈழத்தமிழர்களை கொன்று குவிக்க அப்போதைய காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி அரசு காரணமாக இருந்துள்ளது. இதனால் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமான தி.மு.க., காங்கிரஸ் கட்சியினரை போர்க்குற்றவாளி அறிவித்து அவர்களை விசாரணைக்கு உட்படுத்தி தண்டனை வழங்கவேண்டும் என்றார். எம்.பி.க்கள் மருதராஜா, சந்திரகாசி, எம்.எல்.ஏ. தமிழ்ச் செல்வன் உட்பட பலர் பேசினர்.

இதில் ஒன்றிய செயலாளர் கர்ணன், சிவப்பிரகாசம், கிருஷ்ணசாமி, சுரேஷ், பேரூர் செயலாளர்கள் வினோத், ரெங்கராஜ், செல்வராஜ், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் துரை, ராணி, பூவைசெழியன், லட்சுமி, மாவட்ட அணி செயலாளர்கள் ராஜாராம், சாகுல் அமீது, ராஜேஸ்வரி, வீரபாண்யன், ரமேஷ், முத்தமிழ்செல்வன், கூட்டுறவு வங்கி தலைவர் முகமது இக்பால், எசனை பன்னீர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர். #admkmeeting
Tags:    

Similar News