செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் சந்தன மரத்தை வெட்டி கடத்திய 2 பேர் கைது

Published On 2018-09-20 10:19 GMT   |   Update On 2018-09-20 10:19 GMT
மேட்டுப்பாளையத்தில் சந்தன மரத்தை வெட்டி கடத்திய 2 பேரை கைது செய்த வனத்துறையினர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையம் - கோத்தகிரி ரோட்டில் உள்ள வனமரபியல் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன் சந்தன மரத்தை யாரோ மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்று விட்டனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் செண்பகப் பிரியா உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் தலைமையில் வனத்துறையினர் 2 குழுக்களாக பிரிந்து இரவு வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தன மரத்தை வெட்டி கடத்திய மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஊமப்பாளையம் புதுக்காலனியை சேர்ந்த மதிவாணன் (21), சின்ராஜ் (29) ஆகிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து சந்தன மரத்தை வெட்ட பயன்படுத்தும் கத்திகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரையும் வனத்துறையினர் மேட்டுப்பாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News