செய்திகள்

இன்று முதல் பள்ளிகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

Published On 2018-09-15 04:03 GMT   |   Update On 2018-09-15 04:03 GMT
அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. #Plastic #PlasticBan
சென்னை:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த உத்தரவின் படி அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு ஜனவரி 1-ந்தேதி முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

இந்தநிலையில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்திக்கொள்ள பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-


அனைத்து பள்ளிகளிலும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும். அதற்கு மாற்றாக உள்ள பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது. பள்ளி வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பள்ளிவளாகம் என்ற பெயர் பலகை வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Plastic #PlasticBan
Tags:    

Similar News