செய்திகள்

எட்டயபுரத்தில் ஸ்கேட்டிங் மூலம் ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம்

Published On 2018-09-12 12:10 GMT   |   Update On 2018-09-12 12:10 GMT
பாரதி நினைவு தினத்தையொட்டி பாரதி கல்வி மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு, ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பிரசார ஊர்வலம் எட்டயபுரத்தில் நடைபெற்றது.
எட்டயபுரம்:

பாரதி நினைவு தினத்தையொட்டி பாரதி கல்வி மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு, ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பிரசார ஊர்வலம் எட்டயபுரத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ராஜா தலைமை வகித்தார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற செயலர் பரமானந்தம், டிரஸ்ட் தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலமானது பாரதி பிறந்த இல்லம் முன்பிருந்து தொடங்கி எட்டயபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பாரதி நினைவு மணிமண்டபத்தில் நிறைவடைந்தது.

நிகழ்ச்சியில் ஹெல்மெட் அணிதல், மரக்கன்றுகள் நடுதல், வாக்காளர் விழிப்புணர்வு உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஸ்கேட்டிங் செய்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

நிகழ்ச்சியில் பாரதி இல்ல காப்பாளர் மகாதேவி, பாரதி மணிமண்டப வழிகாட்டி பினோ, டிரஸ்ட் நிர்வாகிகள் கதிரேசன், ஹேமலதா, பயிற்சியாளர்கள் சித்ரா, பாண்டி மீனா, துர்கா, அசோக்குமார், மதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News