செய்திகள்

விநாயகர் சதுர்த்தி - புதுவையில் 126 சிலைகள் பிரதிஷ்டை

Published On 2018-09-05 09:36 GMT   |   Update On 2018-09-05 09:36 GMT
புதுவையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 126 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. விழா கொண்டாடப்படும் நாட்களில் 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
புதுச்சேரி:

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வரும் 13-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி புதுவையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சட்டம்-ஒழுங்கு குறித்த ஆலோசனை கூட்டம் புதுவை போலீஸ் கண்காணிப்பாளர் மாறன் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் மாசுக்கட்டுப்பாட்டு குழுமம், வனத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல துறை அதிகாரிகள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் மாறன், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையில், எந்த ஒரு அசம்பாவிதமும் நேரிடாத வண்ணம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற வேண்டும்.

விநாயகர் சதுர்த்திக்கு 126 விநாயகர் சிலைகள் வைக்கப்படுவதையொட்டி அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒவ்வொரு சிலைக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே செய்து கொள்ள வேண்டும்.

மாசு இல்லாத வகையில் விநாயகர் சிலையை உருவாக்க வேண்டும். விழா கொண்டாடப்படும் நாட்களில் 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவித்தார்.

Tags:    

Similar News