செய்திகள்

தேனி மாவட்டத்தில் பரவலாக மழை

Published On 2018-09-01 10:55 GMT   |   Update On 2018-09-01 10:55 GMT
தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கூடலூர்:

தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கனமழை காரணமாக முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 142 அடி வரை உயர்ந்தது. ஆனால் அதன்பின்பு மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டம் 137.10 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு 606 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து 2207 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இந்த நீர்பாசனத்திற்கு போக வைகை அணையை வந்தடைகிறது.

அணையின் நீர்மட்டம் 69.13 அடியாக உள்ளது. நீர்வரத்து 1895கனஅடியாக உள்ளது. மதுரை குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2030 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணை நீர்மட்டம் 41.75 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.

சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 116.06 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு 3.8, கூடலூர் 1.3, சண்முகாநதி அணை 1, உத்தமபாளையம் 1.6, வீரபாண்டி 6, வைகை அணை 3, மஞ்சளாறு 4, சோத்துப்பாறை 3, கொடைக்கானல் 4.6 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.

மேலும் தேனி மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் இரவு முழுவதும் சாரல் மழை தொடர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News