செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை கடும் வீழ்ச்சி

Published On 2018-08-27 06:26 GMT   |   Update On 2018-08-27 06:26 GMT
காய்கறிகள் வரத்து அதிகரித்து இருப்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்துள்ளது. #Koyambedumarket
போரூர்:

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த வாரம் வரை காய்கறி விலை மிக அதிகமாக விற்கப்பட்டது.

தற்போது கேரளாவில் பெய்த கனமழை, வெள்ளம் காரணமாக அங்கு போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. தற்போது கேரளாவில் கடந்த நிலை திரும்பி வரும் நிலையில் சாலை போக்குவரத்து இந்னும் சீரடையவில்லை.

இதன் காரணமாக கேரள மாநிலத்துக்கு காய்கறிகள் கொண்டு செல்லப்படுவது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொண்டு செல்லப்படும் காய்கறிகள் கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய மார்க்கெட்டுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. வரத்து அதிகரித்து இருப்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்துள்ளது.

கடந்த வாரம் கிலோ 20 ரூபாய்க்கு விற்ற தக்காளி தற்போது 8 ரூபாய்க்கு விற்கிறது. அதேபோல் கடந்த வாரம் 20 ரூபாய்க்கு விற்ற முட்டைகோசும் தற்போது 6 ரூபாய்க்கு விற்கிறது. மற்ற காய்கறிகளின் விலை (கிலோ) வருமாறு:-

வெங்காயம் - ரூ. 20
சின்ன வெங்காயம் - ரூ. 30
உருளை - ரூ. 30
கத்தரிக்காய் - ரூ. 15
வெண்டை - ரூ. 15
கேரட் - ரூ. 30
பீட்ரூட் - ரூ. 13
பீன்ஸ் - ரூ. 30
அவரைக்காய் - ரூ. 20
பச்சை மிளகாய் - ரூ. 25
இஞ்சி - ரூ. 90
பாகற்காய் - ரூ. 25
முள்ளங்கி - ரூ. 8
மாங்காய் - ரூ. 100
வெள்ளரிக்காய் - ரூ. 10
கொத்தவரங்காய் - ரூ. 12
முருங்கைகாய் - ரூ. 20 #Koyambedumarket
Tags:    

Similar News