செய்திகள்

மதிகோன்பாளையம் கோவில் விழாவில் பாதுகாப்பு பணியில் நின்ற போலீசாரை தாக்கிய வாலிபர்கள்

Published On 2018-08-24 17:02 GMT   |   Update On 2018-08-24 17:40 GMT
மதிகோன்பாளையம் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில் ஆடல் பாடல் நிகழ்ச்சியை நிறுத்த சொன்ன போலீசாரை தாக்கிய வாலிபர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம், மதிகோன்பாளையம் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. இந்த கோவில் விழாவில் ஊர்பொதுமக்கள் சார்பில் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் நேற்று நடந்தது. அதற்கு பாதுகாப்பு பணிக்காக தருமபுரி மாவட்ட ஆயுதப்படை போலீசார் சுமார் 30 பேர் நின்று இருந்தனர். அப்போது ஆடல், பாடல் நிகழ்ச்சி நேரம் 10 மணி ஆகி விட்டது. அதனால் சீக்கரம் நிகழ்ச்சியை முடித்து விடுங்கள் என்று ஊர் பெரியவர்களிடம் போலீஸ்காரர் வேடியப்பன் கூறியதாக தெரிகிறது. 

இதனால் அங்குள்ள வாலிபர்கள் கடும் கோபம் அடைந்து எங்கள் ஊருக்கு வந்து நிகழ்ச்சியை நிறுத்த சொல்கிறீயா என்று போலீஸ்காரர்கள் வேடியப்பனை அருகில் இருந்த கட்டையை எடுத்து வாலிபர்கள் தாக்கினர். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர். பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். உடனே சக போலீசார் படுகாயம் அடைந்த வேடியப்பனை மீட்டு தருமபுரி அரசு மருத்து வனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து மதிகோன்பாளையம் போலீசார் பிரதீப்ராஜ் (வயது 23) உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News