செய்திகள்

காவேரி பாலிடெக்னிக் மாணவர்கள் திடீர் போராட்டம் கல்லூரி பஸ்சை சிறை பிடித்தனர்

Published On 2018-08-16 13:26 GMT   |   Update On 2018-08-16 13:26 GMT
சேலத்தில் கல்லூரி பஸ்சை சிறை பிடித்து காவேரி பாலிடெக்னிக் மாணவர்கள் திடீரென போராட்டம் நடத்தினர்.

மேச்சேரி:

சேலம் மாவட்டம், மேச்சேரியில் காவேரி பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரிக்கு பல வழித்தடங்களில் பேருந்துகள் இயங்குகின்றனர்.

இதல் ஒரு பேருந்து காடையாம்பட்டியை அடுத்த கணவாய் புதூர் பகுதியில் இருந்து தீவட்டிபட்டி, பூசாரிபட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, காருவள்ளி, மரகோட்டை, காமனேரி வழியாக கல்லூரிக்கு செல்கிறது.

இந்த வழியாக ஒரு பேருந்து மட்டும் செல்கிறது. ஆகவே இந்த பேருந்தில் 98 மாணவர்கள் கஞ்சநாயக்கன்பட்டி வரை பேருந்தில் நிற்க வழி இல்லாமல் தவிர்த்து வருகின்றனர். இதனால் ஆத்திர மடைந்த மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கூடுதலாக பஸ் விட கோரி கல்லூரி பேருந்தை சிறை பிடித்தனர்.

பஸ் கட்டணம் இந்த மாதத்திற்குள் கட்டவில்லை என்றால் ரூ.10 அபராதம் போடுவதாக மிரட்டல் விடுவதாக மாணவர்கள் புகார் கூறியுள்ளனர். இதே போல் கடந்த 1 மாதம் முன்பு நடந்தது. அதற்கு நிர்வாகம் உடனே கூடுதல் பஸ்கள் விடப்படும் என்று கூறியது. ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை தொடர்ந்து மாணவர்கள் பெற்றோர்கள் சேர்ந்து போராட்டம் நடத்தினர். தகவல் தீவட்டிபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News