செய்திகள்

பெண் மாவோயிஸ்டு ஷைனாவுக்கு 17 வழக்குகளில் ஜாமீன்

Published On 2018-08-13 10:34 GMT   |   Update On 2018-08-13 10:34 GMT
கோவை மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட பெண் மாவோயிஸ்டு ஷைனாவுக்கு 17 வழக்குகளில் ஜாமீன் கிடைத்துள்ளது.
கோவை:

மாவோயிஸ்டு தலைவர் ரூபேஷ், அவரது மனைவி ஷைனா, மாவோயிஸ்டுகள் அனூப், வீரமணி, கண்ணன் ஆகிய 5 பேர் கடந்த 2015-ம் ஆண்டு கோவை கருமத்தம்பட்டி அருகே கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது கேரளாவில் வழக்குகள் இருந்தது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலி சிம்கார்டுகள் பெற்று மோசடி செய்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் தொடர்பாக அந்தந்த மாவட்ட கோர்ட்டுகளுக்கு போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்று ஆஜர்படுத்தி வந்தனர்.

இதற்கிடையே ரூபேஷ் மட்டும் கேரள மாநிலம் திருச்சூர் சிறைக்கு மாற்றப்பட்டார். மற்ற 4 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில் ஷைனாவை ஜாமீனில் எடுப்பதற்கான நடவடிக்கைகளை அவரது தரப்பில் மேற்கொள்ளப்பட்டது.

ஷைனா கைது செய்யப்பட்ட போது அவர் மீது பதியப்பட்ட வழக்கு மற்றும் கேரளாவில் 1 வழக்கு என இரண்டு வழக்குகள் மட்டுமே இருந்தது. அதன்பின்னர் வரிசையாக வழக்குகள் பதியப்பட்டன.

தற்போது ஷைனா மீது தமிழகத்தில் 11 வழக்குகள், கேரளாவில் 6 வழக்குகள் என மொத்தம் 17 வழக்குகள் உள்ளது. இவை அனைத்திலும் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. எனினும் கேரளாவில் ஜாமீன் கிடைத்ததற்கான நகல் கோவைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

எனவே ஷைனாவை கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள மத்திய சிறைக்கு மாற்றினர். எனவே ஷைனா இன்னும் ஓரிரு நாளில் ஜாமீனில் வெளியே வருவார் என தெரிகிறது.
Tags:    

Similar News