செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது

Published On 2018-08-08 00:12 GMT   |   Update On 2018-08-08 00:43 GMT
திமுக தலைவர் கருணாநிதி உடல் சிஐடி காலனி இல்லத்தில் இருந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக ஆம்புலன்ஸ் மூலம் ராஜாஜி அரங்கத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK
சென்னை:

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. வீர வணக்க முழக்கங்களுடன் தொண்டர்கள் வாகனத்தை சூழ்ந்து வந்தனர். அங்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

இதையடுத்து, அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

இந்நிலையில், சிஐடி காலனி இல்லத்தில் உறவினர்கள் இறுதி மரியாதை செலுத்திய பிறகு திமுக தலைவர் கருணாநிதி உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி அரங்கத்துக்கு ஆம்புலன்சில் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது ஏராளமான தொண்டர்கள் கட்சிக் கொடிகள் ஏந்தியபடி கண்ணீருடன் சென்றனர். ராஜாஜி அரங்கத்தை அடைந்த கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK
Tags:    

Similar News