செய்திகள்

தொண்டி அருகே வெடி வைத்து மீன் பிடித்ததை படம் எடுத்த மீனவர்கள் மீது தாக்குதல்

Published On 2018-08-06 11:35 GMT   |   Update On 2018-08-06 11:35 GMT
வெடிகளை வெடிக்கச் செய்து மீன் பிடித்ததை படம் பிடித்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கடலோர காவல்படையினர் தேடி வருகின்றனர்.
தொண்டி:

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள நம்புதாளையைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவரது பைபர் படகில் முத்துராஜா (வயது 24), செல்வம் (19), பூவரசன் (24), காளதாஸ் (18) ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றனர்.

அப்போது புதுக்குடியைச் சேர்ந்த ராஜ்குமரன் என்ற பெயர் கொண்ட பைபர் படகில் இருந்த சிலர் கடலில் வெடிகுண்டு வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அதனை முத்துக்கிருஷ்ணன் படகில் 4 பேரும் செல்போனில் படம் பிடித்துள்ளனர். இதனால் வெடி வைத்து மீன் பிடிப்பதை போலீசிடம் காட்டிவிடுவார்கள் என புதுக்குடியைச் சேர்ந்த மீனவர்கள் வேகமாக வந்து நம்புதாளை மீனவர்கள் படகில் மோதி அவர்கள் வைத்திருந்த மொபைல் போன்களை கடலில் வீசி 4 மீனவர்களையும் கல், கம்பு, கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கி உள்ளனர்.

மேலும் தகாத வார்த்தைகளை பேசியும் வெடிகுண்டு வீசி படகை தகர்த்து விடுவோம் என மிரட்டிச் சென்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

சப்-இன்ஸ்பெக்டர் காசி வழக்குப்பதிவு செய்து வெடிவைத்து மீன் பிடித்ததோடு, மீனவர்களை தாக்கிய புதுக்குடி மீனவர்களை தேடி வருகிறார்.
Tags:    

Similar News