செய்திகள்

பைக்கில் அதிவேகமாக சென்றதை தட்டிக்கேட்ட தொழிலாளர்கள் மீது தாக்குதல்

Published On 2018-08-01 12:26 GMT   |   Update On 2018-08-01 12:26 GMT
வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் மீது சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வந்தவாசி:

வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 38) கட்டிட தொழிலாளி. அவருடன் அதே கிராமத்தைச்சேர்ந்த தேசூ (40), சரவணன் (28) ஆகியோர் கட்டிட வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள ஒரு சிக்கன் பகோடா கடை முன்பாக தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது மேல் மருவத்தூர் சாலையில் இருந்து வந்தவாசி நோக்கி 2 மோட்டார் சைக்கிளில் தீயணைப்பு நிலைய பின் பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள் அதிவேகமாகவும் பேசிக் கொண்டிருந்தவர்கள் மீது உரசியபடி சென்றுள்ளனர்.

தொழிலாளர்கள் 3 பேரும் ஏன் இது போல் வேகமாக செல்கின்றீர்கள் என தட்டி கேட்டனர். அதற்கு 4 வாலிபர்களும் அப்படித்தான் செல்வோம் உன்னால் என்ன பன்ன முடியும் என கேட்டு தகராறு செய்தனர்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பெருமாளை முகத்தின் மீது தாக்கியுள்ளனர்.

தடுக்க வந்த தேசூ, சரவணன் ஆகியோரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த பெருமாள் உள்ளிட்ட 3 பேரும் வந்தவாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து பெருமாள் வந்தவாசி தெற்கு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் வழக்குப்பதிவு செய்து. தீயணைப்பு நிலையம் பின் பகுதியைச் சேர்ந்த 4 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News