செய்திகள்

மதுரையில் விதிகளை மீறிய 45 ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல்- போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

Published On 2018-07-27 10:02 GMT   |   Update On 2018-07-27 10:02 GMT
மதுரையில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 45 ஷேர் ஆட்டோக்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
அவனியாபுரம்:

மதுரை நகர் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. புற்றீசல் போல் முளைத்துள்ள ஷேர் ஆட்டோக்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் கூறி வருகின்றனர்.

ஷேர் ஆட்டோவில் அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிச் செல்வது, ஆவணங்கள் இல்லாமல் இயக்குவது, ஆங்காங்கே ஆட்டோக்களை நிறுத்தி ஆட்களை ஏற்றுவது போன்ற விதிமீறல்கள் நடந்து வருகின்றன.

இதற்கு போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த நிலையில் அவனியாபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அவனியாபுரம், வில்லாபுரம், மீனாட்சிநகர், திருப்பரங்குன்றம் ரோடு, சிந்தாமணி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையில் ஏட்டுகள் ஆல்வின், முருகன் மற்றும் போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 45 ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. #tamilnews
Tags:    

Similar News