search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து போலீஸ்"

    • இந்த பெண் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஒட்டியது, ஹெல்மெட் அணியாமல் சென்றது உள்ளிட்டவை சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளன
    • சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு பெங்களூரு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்

    பெங்களூருவில் 270 முறை சாலை விதிகளை மீறிய பெண்மணிக்கு ₹1.36 லட்சம் அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ் அவரது வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளது.

    இந்தப் பெண் வழக்கமாக பெங்களூரு, பனஸ்வாடியில் உள்ள காக்ஸ் டவுன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஸ்கூட்டரில் பயணித்து வருவது வழக்கம். இவர், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது, தலைக்கவசம் இல்லாமல் பயணியை பின்னால் அமர வைத்துச் சென்றது, தவறான திசையில் வாகனத்தை ஓட்டிச் சென்றது, வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பேசியது, போக்குவரத்து சிக்னல்களை மதிக்காமல் கடந்து செல்வது போன்ற பல்வேறு வகையான விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளார்.

    இந்த பெண் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஒட்டியது, ஹெல்மெட் அணியாமல் சென்றது, டிராஃபிக் சிக்னல்களை கடைப்பிடிக்காதது உள்ளிட்டவை சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளன.

    இந்நிலையில் அந்த பெண் அண்மையில் தலைக்கவசம் அணியாமல் தனது ஸ்கூட்டரில் 3 பேரை ஏற்றிக்கொண்டு சென்றார். இதையடுத்து அவருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து ரசீது வழங்கினர். அதில் அபராதத் தொகை ரூ.1.36 லட்சம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    அதாவது இதற்கு முன்பு அந்தப் பெண் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதற்கான அபராதத்தையும் சேர்த்து, இந்த தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அவர் ஓட்டும் ஸ்கூட்டரின் விலையை விட கூடுதலாகும்.

    இந்தக் கணக்குகளை எல்லாம் எடுத்துச் சொல்லி, இதுபோன்ற அபராதங்களில் சிக்காமல் இருக்கவும், பாதுகாப்பு கருதியும் வாகன ஓட்டிகள் சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு பெங்களூரு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    • அபராதத்தை கட்டாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏற்பாடு
    • ரூ.2 கோடியே 14 லட்சம் அபராதம் வசூல்

    நாகர்கோவில், நவ.2-

    குமரி மாவட்டத்தில் சாலை விபத்துக்கள் அதிகளவு நடந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த போலீ சார் பல்வேறு நட வடிக்கை களை மேற்கொண்டு வரு கிறார்கள்.

    நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி சப்-டிவிசன்க ளுக்குங பட்ட பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வரு கிறார்கள். போக்கு வரத்து விதி முறைகளை மீறுவோர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் தடுத்து நிறுத்தி போலீசார் அபரா தம் விதித்து வருகிறார்கள். கனிமவளங்களை அதி கமாக ஏற்றி வரும் லாரி களுக்கும் அபராதம் விதிக் கப்பட்டு வருகிறது. போலீ சாரின் இந்த சோதனையில் தினமும் 2000-க்கும் மேற் பட்டவர்கள் சிக்கி வரு கிறார்கள். நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் போக்குவரத்து விதி முறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை மேற் கொண்டு வருகிறார்கள்.

    பார்வதிபுரம், வடசேரி, செட்டிகுளம், கலெக்டர் அலுவலக பகுதிகளில் வாகன சோதனை மேற் கொண்டு வருகிறார்கள். அதிகாரம் ஏற்றி வரும் வாக னங்களுக்கும் அபரா தம் விதிக்கப்பட்டு வரு கிறது. ஹெல்மெட் அணி யாமல் செல்பவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதிப்பதுடன் அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டிக ளுக்கும் அபராதம் விதித் துள்ளனர். குடிபோதை யில் வாகனம் ஓட்டியவர்களும் இந்த சோதனையில் சிக்கி உள்ளனர்.

    கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 10 மாதத்தில் நாகர் கோவில் போக்குவரத்து பிரிவு போலீஸ் நிலை யத்தில் மட்டும் போக்கு வரத்து விதிமுறைகளை மீறியதாக ரூ.36 ஆயிரத்து 290 வழக்கு கள் பதிவு செய்யப்பட் டுள்ளது. இதன் மூலமாக ரூ.2 கோடியே 14 லட்சத்து 17 ஆயிரம் பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

    10,267 வழக்குகளில் அபாரதம் விதிக்கப்பட்ட அபராத தொகையை கட்டாமல் உள்ளனர். இதன் மூலமாக ரூ.1 கோடியே 25 லட்சம் நிலுவையில் உள்ளது. இதை வசூல் செய்வதற்கான நட வடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகி றார்கள். அபராதம் விதிக் கப்பட்டவர்கள் உடனடியாக அபராத தொகையை கட்டா விட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

    இதேபோல் தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி சப்-டிவிஷன்களுக்குட் பட்ட பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களிலும் அபராதம் விதிக்கப்பட்ட பிறகும் அதை கட்டாமல் ஏராளமானோர் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த அபராத தொகைகளை எப்படி வசூல் செய்யலாம் என்பது குறித்து போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கை யில் இறங்கி உள்ளனர்.

    இது தொடர்பாக பட்டி யல் தயாரிக்கப்பட்டு வரு கிறது. வட்டார போக்கு வரத்து அலுவலகம் மூ லமாக நடவடிக்கை எடுக்க லாமா? என்பது குறித்தும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    • பொதுமக்கள் கவனத்திற்கு மாண்டஸ் புயலின் காரணமாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
    • வாகன ஓட்டிகள் மிக அவசியமான காரணங்களுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ளுமாறு போக்குவரத்துக் காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    சென்னை:

    மாண்டஸ் புயலையொட்டி சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    பொதுமக்கள் கவனத்திற்கு மாண்டஸ் புயலின் காரணமாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் மிக அவசியமான காரணங்களுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ளுமாறு போக்குவரத்துக் காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    மெரினாவில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பாலம் சேதம்

    மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட நடைபாலம் மாண்டஸ் புயலால் சேதம் அடைந்துள்ளது. ரூ.1½ கோடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் சில நாட்களிலேயே சேதம் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பைனான்சியர் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளிகள் காரைக்கால் வழியாக காரில் தப்பி செல்லும் போது, காரைக்கால் போக்குவரத்து போலீசார் மடக்கி பிடித்தனர்.
    • காரைக்கால் எல்லையான அம்பகரத்தூர் வழியாக சேத்தூர் அருகே சென்ற குற்றவாளிகள் காரை தமிழக போலீசார் விரட்டி பிடிக்கும் பொழுது, கார் நிற்காமல் அதிவேகமாக சென்றது.

    புதுச்சேரி:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பைனான்சியர் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளிகள் காரைக்கால் வழியாக காரில் தப்பி செல்லும் போது, காரைக்கால் போக்குவரத்து போலீசார் மடக்கி பிடித்தனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை சேர்ந்த பைனான்சியர் மனோகரன் என்பவர் கடந்த மாதம் கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து, கொலை தொடர்பாக சிலர் கோர்ட்டில் சரணடைந்து வந்தனர். இந்நிலையில், முக்கிய குற்றவாளிகள் 2பேர் காரைக்கால் வழியாக தப்பி செல்வதாக நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசித் தகவல் சென்றது. அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் குற்றவாளிகளை பிடிக்க காரில் சென்றனர். காரைக்கால் எல்லையான அம்பகரத்தூர் வழியாக சேத்தூர் அருகே சென்ற குற்றவாளிகள் காரை தமிழக போலீசார் விரட்டி பிடிக்கும் பொழுது, கார் நிற்காமல் அதிவேகமாக சென்றது.

    அவ்வாறு செல்லும் பொழுது சாலையில் சென்ற சிலரை கார் இடித்து விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த காரைக்கால் போக்குவரத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மரி கிறிஸ்டியன் பால் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் போக்குவரத்து போலீசார், போலீஸ் ஜீப் மற்றும் இருசக்கர வாகனத்தில் திருநள்ளார் சாலையில் காரை நிறுத்த முயன்றனர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. தொடர்ந்து, ஒரு சிறிய சந்தில் குற்றவாளிகள் கார் சென்ற பொழுது, காரை மடக்கி பிடித்த காரைக்கால் போக்குவரத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது பின்னால் வந்த தமிழக போலீசார், அந்த காரில் வந்தவர்கள் நாகை மாவட்டத்தில் நடைபெற்ற கொலையின் முக்கிய குற்றவாளிகள் என்றும் அவர்களை பிடிக்க விரட்டி வந்ததாக கூறினர். இதனை அடுத்து பல வாகனங்கள் மீது விபத்தை ஏற்படுத்தியதால் 2 குற்றவாளிகள் ஓட்டிவந்த காரை பறிமுதல் செய்து, 2 குற்றவாளிகளை(கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் என்பதால் பெயர்களை , காரைக்கால் போலீசார் தெரியப்படுத்தவில்லை) தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர். சினிமா பாணியில் தமிழக மற்றும் காரைக்கால் போலீஸார்கள் காரை விரட்டி சென்று குற்றவாளிகளை பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×