செய்திகள்

வேப்பந்தட்டை அருகே இரு தரப்பினர் மோதல்: 11 பேர் மீது வழக்கு

Published On 2018-07-21 13:11 GMT   |   Update On 2018-07-21 13:11 GMT
வேப்பந்தட்டை அருகே சிலை வைக்கும் தகராறில் இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்த பாண்டகப்பாடியை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 40). இவரது மகன் சிலம்பரசன் கடந்த 7 வருடத்துக்கு முன்பு இறந்து விட்டார். 

இந்நிலையில் இறந்த சிலம்பரசனுக்கு குல தெய்வ கோவிலில் சிலை வைத்தால் குடும்பம் விருத்தியடையும் என உறவினர்கள் சிலர் சின்னதுரையிடம் கூறியுள்ளனர். இதனைக்கேட்ட  சின்னதுரை தனது மகன் சிலம்பரசனுக்கு சிலை செய்து அதே ஊரில் உள்ள தீப்பாஞ்சியம்மன் கோவிலில் வைத்துள்ளார். சாமி கும்பிடும் இடத்தில் இறந்தவரின் சிலை வைக் கக்கூடாது என அதே ஊரை சேர்ந்த சின்னதுரையின் உறவினர்கள் முத்துசாமி, சுப்பிரமணி மற்றும் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று சின்னதுரையின் தங்கை கொளஞ்சி பாண்டகப்பாடி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது முத்துசாமி தரப்பினர் வந்து கோவிலில் வைத்துள்ள சிலையை அகற்ற சொல்லியதாக தெரிகிறது. 

இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாகியது. இதில் காயம் அடைந்த கொளஞ்சி, சின்னதுரை, அவரது தம்பி வடிவேல் ஆகியோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கொளஞ்சி வி.களத்தூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் முத்துசாமி  உள்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News