செய்திகள்

புதுவையில் 3 ஆயிரம் லாரி ஓடவில்லை

Published On 2018-07-20 10:14 GMT   |   Update On 2018-07-20 10:14 GMT
புதுவையில் லாரி ஸ்டிரைக் நடைபெறுவதால் நாள் ஒன்றுக்கு ரூ. 150 கோடி வர்த்தக பாதிப்பு ஏற்படும் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். #LorryStrike
புதுச்சேரி:

டீசல் விலை உயர்வு, தனி நபர் காப்பீட்டு தொகை உயர்வு, சுங்கவரி கட்டணம் உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பாக இன்று நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.

புதுவையிலும் இன்று காலை 6 மணி முதல் லாரி ஸ்டிரைக் தொடங்கியது. இதனால் புதுவையில் உள்ள 3 ஆயிரத்துக்கும் அதிகமான லாரிகள் இயக்கப்படவில்லை.

உள்ளூர் லாரிகளும், வெளியூரில் இருந்து வந்த லாரிகளும் மேட்டுப்பாளையத்தில் உள்ள போக்குவரத்து முனையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

லாரிகள் நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு வர்த்தக இழப்பாக ரூ.150 கோடி ஏற்படும் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். #LorryStrike

Tags:    

Similar News