செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி தான் பிரதமரை தீர்மானிக்கும்- டி.டி.வி. தினகரன்

Published On 2018-07-15 01:32 GMT   |   Update On 2018-07-15 01:32 GMT
வரும் பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி தான் பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.
ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் நடப்பது மக்கள் விரோத ஊழல் நிறைந்த ஆட்சி. இந்த ஆட்சியில் நடந்த முறைகேடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியே வரும். நிச்சயமாக ஆட்சிக்கு முடிவுக்கு வரும். கல்வி தொடர்பாக மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காது.

பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகத்திற்கும் சட்டமன்ற தேர்தல் வரும். அப்போது ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை அமைத்து ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை நாங்கள் நிறைவேற்றுவோம்.

இன்னும் 7 அல்லது 8 மாதங்களில் வரும் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமையில் சிறப்பான கூட்டணி அமைக்கப்படும். எங்கள் கூட்டணி தான் பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும். மத்தியில் யார்? ஆட்சி அமைத்தாலும் யார் பிரதமர் என்பதை தமிழக எம்.பி.க்கள் தீர்மானிக்க போகிறார்கள்.

தமிழகத்திற்கு எது தேவையில்லையோ மக்கள் ஏற்கவில்லையோ அதை சரி செய்து நல்ல அரசாங்கம் அமைக்க தமிழக மக்கள் வாக்களிப்பார்கள்.

18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நல்ல தீர்ப்பாக இருக்கும். இந்த வழக்கில் 100 சதவீதம் வெற்றி கிடைக்கும். நீதிபதிகளுக்கு யார்? மிரட்டல் விடுத்தார்கள் என்பது பற்றி எனக்கு தெரியாது.

பாரதிய ஜனதா கட்சியினர் தமிழக அரசை பற்றி என்ன விமர்சனம் செய்தாலும் எப்படி பதில் சொல்வார்கள். அவர்கள் தான் மத்திய அரசுக்கு சேவகர்களாக இருக்கிறார்கள்.

தமிழகத்தில் ஊழல் அதிகாரித்துவிட்டது. இதை அமித்ஷா சொன்னால் தான் ஏற்பீர்களா. சாதாரண மக்களுக்கும் இது தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News