செய்திகள்

தல்லாகுளத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியரிடம் ரூ.5 லட்சம் திருட்டு

Published On 2018-07-06 11:19 GMT   |   Update On 2018-07-06 11:19 GMT
தல்லாகுளத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியரிடம் ரூ.5 லட்சம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை தலலாகுளத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் டெக்னீசியனாக வேலை பார்ப்பவர் கோதண்ட ரமேஷ் (வயது51).

இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள கனரா வங்கியில் ரூ. 5 லட்சம் எடுத்தார். அதனை தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்துக் கொண்டு அலுவலகம் வந்தார். அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வேலைக்குச் சென்றார்.

திரும்பி வந்து பார்த்த போது பெட்டி உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த ரூ. 5 லட்சம் திருட்டு போயிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News