செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே அரசு பஸ்சில் கடத்திய கஞ்சா, செம்மரக்கட்டை பறிமுதல்- 5 பேர் கைது

Published On 2018-07-06 10:06 GMT   |   Update On 2018-07-06 10:06 GMT
கும்மிடிப்பூண்டி அருகே அரசு பஸ் மற்றும் கார்களில் கஞ்சா, செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் கணவன், மனைவி உள்பட 5 பேரை கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் நவீன ஒருங் கிணைந்த சோதனைச் சாவடி உள்ளது. இங்கு இன்று அதிகாலை காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. ஜூலியர் சீசர் தலைமையில் இன்ஸ் பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் வாகன சோத னையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆந்திர அரசு பஸ்சில் சோதனை நடத்தினர். இதில் பஸ்சில் பயணம் செய்த கம்பத்தை அடுத்த உத்தமபாளையத்தை சேர்ந்த ஐயன், அவரது மனைவி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் ஆகியோர் கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது.

அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 35 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் அதே சோதனைச் சாவடியில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்ட போது ஆந்திராவில் இருந்து வந்த காரை நிறுத்த முயன்றனர். ஆனால் அதில் இருந்த 2 வாலிபர்களும் ஓடும் காரில் இருந்து கீழே குதித்து தப்பி ஓட முயன் றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். டிரைவர் இல்லாமல் ஓடிய காரை பொன்னேரி கலால் போலீஸ் காரர் சந்திரசேகரன் நிறுத் தினார். அப்போது அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

பிடிபட்ட 2 பேரும் ஆந்திர மாநிலம் காளஹஸ்தியை சேர்ந்த சுரேஷ்பாபு, பாலச் சந்திரா என்பதும் ஆந்திரா வில் இருந்து சென்னைக்கு காரில் செம்மரக்கட்டைகள் கடத்தி வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து கார், 300 கிலோ செம்மரக்கட்டை பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களுக்கு செம்மரக் கட்டை கிடைத்தது எப்படி? யாருக்கு கடத்தி செல்லப்படு கிறது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

அதிகாரிகளின் அதிரடி சோதனையில் கஞ்சா, செம்மரக்கட்டைகள் அடுத் தடுத்து சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Tags:    

Similar News