search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவன் மனைவி கைது"

    • மருத்துவ குழுவினர் பசுமை நகருக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
    • கைது செய்யப்பட்ட 2 பேரையும் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பசுமை நகரில் சட்ட விரோதமாக கருவில் இருப்பது ஆணா?, பெண்ணா? என கண்டறிந்து பணம் பறிப்பதாக, மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணைய இயக்குனர் கண்ணகிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் மருத்துவ குழுவினர் பசுமை நகருக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது திருப்பத்தூர் அடுத்த ராச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த துரைசாமி மகன் ஐயப்பன் (வயது 29) மற்றும் அவருடைய மனைவி கங்காகவுரி (27) ஆகிய 2 பேரும் வாடகை வீட்டில், சட்டவிரோதமாக கருவில் இருப்பது ஆணா?, பெண்ணா? என பரிசோதித்து பணம் பறித்து வந்ததும் தெரிய வந்தது.

    பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து எந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 2 பேரையும் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • குழந்தையை மீட்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் ஊசி, பாசி மாலை போன்றவற்றை வியாபாரம் செய்பவர்கள் தங்கி வருகிறார்கள். கடந்த 4 நாட்களுக்கு முன்பு இரவு தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் என்பவர் தனது மனைவி மற்றும் நான்கு மாத ஆண் குழந்தையுடன் தங்கி இருந்தார்.

    இரவு கணவன், மனைவி இருவரும் குழந்தையை அருகில் வைத்துவிட்டு தூங்கினார்கள். நள்ளிரவு கண்விழித்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. அதிர்ச்சியடைந்த முத்துராஜ் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவு 50 வயது மதிக்கத்தக்க பெண்ணும் ஆண் ஒருவரும் முத்துராஜின் குழந்தையை தூக்கி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் ரெயில் மூலமாக குழந்தையை கேரளாவுக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

    குழந்தையை மீட்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. குழந்தை கடத்தப்பட்டது குறித்து குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் திருவனந்தபுரத்தில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கேரள மாநிலம் சிறையின் கீழ் ரெயில் நிலையத்தில் ஒரு தம்பதியர், குழந்தையுடன் சந்தேகப்படும்படி உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    உடனே கேரள போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தனர். பின்னர் இருவரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து குழந்தையை கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டனர்.

    இதையடுத்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். குழந்தை மீட்கப்பட்டது குறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வடசேரி போலீசார் அங்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டனர். குழந்தையை கடத்திய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் குழந்தையையும், கைது செய்யப்பட்ட 2 பேரையும் வடசேரி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியபோது, வட்டக்கோட்டை பகுதியைச் சேர்ந்த நாராயணன் (வயது 48), அவரது மனைவி சாந்தி என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மீட்கப்பட்ட குழந்தையை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் போலீசார், பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தையை மீட்ட தனிப்படையினருக்கு போலீஸ் சூப்பிரண்டு வெகுமதிகளை வழங்கினார்.

    • கணவன் மனைவி இருவருக்கும் 2 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ. 2,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.
    • நீதிபதி விசாரணைக்கு பின், கணவன்-மனைவி இருவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கொத்தூர் கிராமத்தை சேர்ந்த சீனிவாசரெட்டி, முனிரெட்டி ஆகிய இருவருடைய 50 ஏக்கர் நிலத்தை, அதே பகுதியை சேர்ந்த ராஜாரெட்டி, அவரது மனைவி ரத்தினம்மாள் பெயரில் கடந்த 2006-ம் ஆண்டு ஆள் மாறாட்டம் செய்து நிலத்தை பதிவு செய்து அபகரித்தாக கூறப்படுகிறது.

    இது குறித்து சீனிவாசரெட்டி மத்திகிரி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு ஓசூர் ஜே.எம்-2 நீதிமன்றத்தில் விசாரணை நடந்ததில், கடந்த 2010 - ம் வருடம் கணவன் மனைவி இருவருக்கும் 2 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ. 2,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.

    இந்த தீர்ப்பு குறித்து ராஜா ரெட்டி குடும்பத்தினர் மேல்முறையீடு செய்தனர். 2018-ம் ஆண்டு ஓசூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம் இந்த தீர்ப்பை உறுதி செய்தது.

    இதனை தொடர்ந்து மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் கடந்த 21.11.2022 அன்று ஆண்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

    தீர்ப்புக்கு பின் ராஜாரெட்டி அவரது மனைவி ரத்தினம்மாள் ஆகிய இருவரும் தலைமறைவானதாக தெரிகிறது.

    இவர்களை கைது செய்ய போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் அவர்களை, மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி கைது செய்து ஓசூர் (ஜே.எம் 2-ல்) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

    நீதிபதி விசாரணைக்கு பின், கணவன்-மனைவி இருவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கோடிக்கணக்கான மதிப்புடைய, 50 ஏக்கர் சொத்து க்களை அபகரிக்க முயன்ற கணவன், மனைவி கைது செய்யப்பட்டசம்பவம், ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அருண்பிரசாத் எழுதிய பரபரப்பு கடிதம் போலீசில் சிக்கியது.
    • எனது வீட்டுக்கும், பக்கத்து வீட்டுக்கும் சென்று வர பொது வழிப்பாதை இருந்தது.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பி.பள்ளிப்பட்டி லூர்துபுரத்தை சேர்ந்தவர் அருண்பிரசாத் (வயது 46).

    இவர் பத்திரெட்டிஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி தணிகையேஸ்வரி (42). இவர் மணலூர் அரசு நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த தம்பதிக்கு தீபன், ரித்திக் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல் அருண்பிரசாத், தணிகையேஸ்வரி பள்ளிக்கு சென்றனர்.

    திடீரென அருண்பிரசாத், மணலூருக்கு சென்று, தணிகையேஸ்வரியிடம் வீட்டு சாவியை பெற்றுக்கொண்டு, வீட்டுக்கு திரும்பினார்.

    பின்னர் தணிகையேஸ்வரி செல்போன் மூலம் பலமுறை அழைத்தும், அருண்பிரசாத் போனை எடுக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த தணிகையேஸ்வரி வீட்டுக்கு திரும்பினார். அப்போது அங்கு அருண்பிரசாத் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதுகுறித்து பொம்மிடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அருண்பிரசாத் எழுதிய பரபரப்பு கடிதம் போலீசில் சிக்கியது.

    அதில் எனது வீட்டுக்கும், பக்கத்து வீட்டுக்கும் சென்று வர பொது வழிப்பாதை இருந்தது.

    அதனை பக்கத்து வீட்டுக்காரர் ஆக்கிரமித்து, வேலி அமைத்து விட்டார்.

    இதுகுறித்து பக்கத்து வீட்டுகாரர்களிடம் கேட்டபோது, என்னை மிரட்டினார்.

    மேலும் எனது வீட்டருகே வசிக்கும் உடன்பிறவா தம்பி சாந்து என்பவர் மீது பக்கத்து வீட்டுகாரர்கள் கொட்டகைக்கு தீ வைத்ததாக கூறி காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர்.

    அதை நான் பார்த்ததாகவும் காவல் நிலையத்தில் பொய் சாட்சி கூற சொன்னார்கள். இதனால் நான் மனமுடைந்து போனேன். எனது உடன்பிறவா தம்பி சாந்து இவர் கொடுத்த தொல்லையால் ஜெயிலுக்கு சென்றுள்ளார்.

    சாட்சி சொல்லவில்லை என்றால் என்னையும், எனது மனைவியும் வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை எடுப்பேன் என மிரட்டினார்.

    அதனால் எங்கள் குடும்பத்தினர் மிகுந்த மனவேதனையில் உள்ளோம் என்று ஆசிரியர் அருண்பிரசாத் அந்த கடிதத்தில் எழுதியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் இந்த தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ஆசிரியரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பக்கத்து வீட்டுகாரர்களான நாமக்காரர் என்னும் சிவசங்கர், அவரது மனைவி ஜெயா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கண்டரக்கோட்டை சக்தி நகரில் சாராய விற்பனையில் பிரபாகரன் ஈடுபட்டார்.
    • சாராய பாக்கெட்களை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டிபோலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ)நந்தகுமார்,சப்இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் இன்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பண்ருட்டி அருகே கண்டரக்கோட்டை சக்தி நகரில் சாராய விற்பனையில் ஈடுபட்டபிரபாகரன், வரது மனைவி பிரபாகரன் மனைவி ராஜேஸ்வரி ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து ஏராளமான சாராய பாக்கெட்களை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×