செய்திகள்

திருச்சிற்றம்பலம் போலீஸ் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி

Published On 2018-06-14 16:57 GMT   |   Update On 2018-06-14 16:57 GMT
திருச்சிற்றம்பலம் போலீஸ் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி பூமி பூஜையுடன் தொடங்கியது.
திருச்சிற்றம்பலம்:

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் போலீஸ் நிலையம் பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த போலீஸ் நிலையத்துக்கு சொந்தமாக புதிய கட்டிடம் கட்ட அரசு முடிவு செய்தது.

அதன்படி கட்டுமான பணிகளுக்கு ரூ.53 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிய போலீஸ் நிலையம் கட்டுவதற்கு செருவாவிடுதி தெற்கு வெள்ளிச்சந்தை பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு இருந்த ஆக்கிரமிப்புகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர்.

இந்த நிலையில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் நேற்று போலீஸ் நிலையம் கட்டுவதற்கான பணிகள், பூமி பூஜையுடன் தொடங்கின. இதற்கான நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமரன் (திருச்சிற்றம்பலம்), ராஜேந்திரன் (சேதுபாவாசத்திரம்), தியாகராஜன் (அதிராம்பட்டினம்), அன்பழகன் (பட்டுக்கோட்டை), ஜெயா (பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையம்) மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News