செய்திகள்

ஆலத்தூர் செட்டிக்குளத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி

Published On 2018-06-08 14:49 GMT   |   Update On 2018-06-08 14:49 GMT
ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் அரசு மேல் நிலைப்பள்ளியின் தேசிய பசுமைப்படை மாணவர்களின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் அரசு மேல் நிலைப்பள்ளியின் தேசிய பசுமைப்படை மாணவர்களின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் நாகமணி தொடக்கி  வைத்தார். மாணவ மாணவிகள் மரம் வளர்ப்போம், மழை பெறுவோம், பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் சுற்றுச் சூழலைக் காப்போம், பாலிதின் பயன்பாட்டைக் குறைப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய பாதகைகளை ஏந்தியும் கோசகங்கள் எழுப்பியும் செட்டிகுளம் முக்கிய வீதிகள் வழியாத வந்த பேரணி பள்ளி வளாகத்தில் முடிந்தது.

பின்னர் பள்ளி மாணவ மாணவி களிடையேசுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்த பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி ஆகிய போட்டி கள்நடத்தப்பட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு  இந்துஸ்தான் பெட்ரோலிய கார்ப்ரேசன் நிறுவனத்தின் திருச்சி மண்டலத்தின் விற்பனை மேலாளர்கள் தினேஷ், சாரங்கி பரிசுகள் வழங்கினார். 

நிகழ்ச்சியில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் மணி,ஜுனியர் ரெட் கிராஸ் மாவட்ட கன்வீனர் ராதா கிருஷ்ணன், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கினைப்பாளர் ராமன், சாரண சாரணிய அமைப்பின் மாவட்ட உதவி செயலர் தனபால், பசுமைப் படை ஒருங்கினைப்பாளர் பாஸ்கர் அகியோர் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு குறித்து சிறப்புரை ஆற்றினர்.
Tags:    

Similar News