search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலத்தூர்"

    ஆலத்தூரில் கார் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்போரூர்:

    திருப்போரூரை அடுத்த ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பம்மாள் (வயது 50) இவர் சாலையோரத்தில் காய்கறிகடை வைத்துள்ளார். நேற்று இரவு சுமார் 9 மணியளவில் காய்கறி கடை வியாபாரம் முடிந்து காய்கறிமூட்டைகளை எதிரில் உள்ள ஒரு கடையில் வைப்பதற்காக சாலையை கடக்க முற்பட்டார். அப்போது வேகமாக திருப்போரூரிலிருந்து மாமல்லபுரம் நோக்கி சென்ற கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தூக்கி எறியப்பட்ட குப்பம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் பூஞ்சேரி கூட்ரோட்டில் பிடிபட்டது. இச்சம்பவம் குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கார் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் அரசு மேல் நிலைப்பள்ளியின் தேசிய பசுமைப்படை மாணவர்களின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    பாடாலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் அரசு மேல் நிலைப்பள்ளியின் தேசிய பசுமைப்படை மாணவர்களின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் நாகமணி தொடக்கி  வைத்தார். மாணவ மாணவிகள் மரம் வளர்ப்போம், மழை பெறுவோம், பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் சுற்றுச் சூழலைக் காப்போம், பாலிதின் பயன்பாட்டைக் குறைப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய பாதகைகளை ஏந்தியும் கோசகங்கள் எழுப்பியும் செட்டிகுளம் முக்கிய வீதிகள் வழியாத வந்த பேரணி பள்ளி வளாகத்தில் முடிந்தது.

    பின்னர் பள்ளி மாணவ மாணவி களிடையேசுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்த பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி ஆகிய போட்டி கள்நடத்தப்பட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு  இந்துஸ்தான் பெட்ரோலிய கார்ப்ரேசன் நிறுவனத்தின் திருச்சி மண்டலத்தின் விற்பனை மேலாளர்கள் தினேஷ், சாரங்கி பரிசுகள் வழங்கினார். 

    நிகழ்ச்சியில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் மணி,ஜுனியர் ரெட் கிராஸ் மாவட்ட கன்வீனர் ராதா கிருஷ்ணன், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கினைப்பாளர் ராமன், சாரண சாரணிய அமைப்பின் மாவட்ட உதவி செயலர் தனபால், பசுமைப் படை ஒருங்கினைப்பாளர் பாஸ்கர் அகியோர் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு குறித்து சிறப்புரை ஆற்றினர்.
    ×