செய்திகள்

திருவாரூர் அருகே ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்

Published On 2018-06-08 08:04 GMT   |   Update On 2018-06-08 08:04 GMT
திருவாரூர் அருகே ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் குழாய் பதிக்கும் பணிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகளை பாதியில் நிறுத்தி விட்டு ஊழியர்கள் வெளியேறினர்.
திருவாரூர்:

திருவாரூர் அருகே கூடூர் ஊராட்சி முக்குளத்தில் ஒன்ஜிசி நிறுவனம் சார்பில் விளை நிலங்களில் குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த விளை நிலங்களில் குழாய் பதிக்கும் பணிகள் வெள்ள குடியில் தொடங்கி அடியகமங்கலம் வரை பல்வேறு கிராமங்கள் வழியாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் விளைநிலங்களில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் குழாய்கள் பதிக்கப்பட்டு எண்ணெய் எடுத்து செல்லும் போது கசிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இதை எதிர்த்து போராட்டம் நடத்தி வருவதால் குழாய் பதிக்கும் பணிகள் தொடர்ந்து தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக முசகுளக் கிராமத்தில் குழாய் பதிக்கும் பணி நேற்று நடைபெற்றது. இதனை அறிந்த கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர், குழாய் பதிப்பதால் விளைநிலங்களை பாதிக்கும் என கூறி குழாய் பதிக்கும் பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பணிகள் மேற்கொண்டிருந்த ஊழியர்கள் பணிகளை பாதியிலேயே நிறுத்தி விட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினர்.

இது தொடர்பாக கிராம மக்களுடன், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News