செய்திகள்

போக்குவரத்து விதிகளை மீறியதாக 588 பேர் மீது வழக்கு - ரூ.76 ஆயிரம் அபராதம் வசூல்

Published On 2018-06-07 17:49 GMT   |   Update On 2018-06-07 17:49 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 588 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து ரூ.76 ஆயிரத்து 700 அபராதம் வசூலிக்கப்பட்டது
போளூர்:

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின்பேரில், போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னராஜ் மேற்பார்வையில் போளூர், சேத்துப்பட்டு, கடலாடி, கலசபாக்கம், ஜமுனாமரத்தூர் ஆகிய 5 போலீஸ் நிலைய எல்லைக்குள் போலீசார் வாகன தணிக்கை செய்தனர்.

கடந்த மே மாதத்தில், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 94 பேர் மீதும், வாகனங்களில் அதிகம் பேரை ஏற்றிச்சென்ற 73 பேர் மீதும், ‘ஹெல்மெட்’ அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 65 பேர் மீதும், சீருடை அணியாமல் வாகனம் ஓட்டிய 58 பேர் மீதும், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 28 பேர் உள்பட பல்வேறு சாலை விதிகளை மீறியதாக 588 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து ரூ.76 ஆயிரத்து 700 அபராதம் வசூலிக்கப்பட்டது. 
Tags:    

Similar News