செய்திகள்

பிளஸ்-2 தேர்வு முடிவு: திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் 3-வது இடம்

Published On 2018-05-16 09:33 GMT   |   Update On 2018-05-16 09:33 GMT
தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. பிளஸ்-2 தேர்வில் திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் 3-வது இடத்தை பெற்றுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 114 மாணவர்களும், 13 ஆயிரத்து 466 மாணவிகளும் என 24 ஆயிரத்து 580 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள்.

இவர்களில் 23 ஆயிரத்து 640 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 10 ஆயிரத்து 530 பேரும், மாணவிகள் 13 ஆயிரத்து 110 பேரும் ஆவார்கள். மொத்த தேர்ச்சி விகிதம் 96.18 ஆகும்.

மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் பழனிசாமி கூறியதாவது-

திருப்பூர் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 580 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள். இவர்களில் 23 ஆயிரத்து 640 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 96.18 ஆகும்.

தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. முதல் முறையாக இந்த இடத்தை பிடித்து உள்ளது. கடந்த ஆண்டு 8-வது இடத்தில் இருந்தது.

திருப்பூர் மாவட்டம் 3-வது இடத்தை பிடிக்க காரணமான முதன்மை கல்வி அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்.

கடந்த ஆண்டு அரசு பள்ளியில் சிறந்த மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தரமான ஆசிரியர்களை கொண்டு ஐ.ஐ.டி, என்.ஐ.டி. போன்ற உயர் கல்விக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் 5 மாணவர்கள் ஐ.ஐ.டி. முதல் நிலை தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News