செய்திகள்

காஞ்சீபுரம் வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 75 கிலோ கஞ்சா பறிமுதல்

Published On 2018-05-07 07:27 GMT   |   Update On 2018-05-07 07:27 GMT
ஆந்திராவிலிருந்து காஞ்சீபுரம் வழியாக கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்ற 75 கிலோ கஞ்சாவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர்:

ஆந்திராவிலிருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்துவதாக காஞ்சீபுரம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதை அடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும்போலீசார் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சென்னை நோக்கி வந்த சந்தேகத்திற்குரிய காரை மடக்கி சோதனை செய்தனர். இதில் 75 கிலோ கஞ்சா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட நிலக்கோட்டையைச் சேர்ந்த கதிரேசன் (45) என்பவரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட கதிரேசனை திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுபாஷினி முன்னிலையில் ஆஜர்படுத்தி புழல் சிறைக்கு கொண்டு சென்றனர்.#tamilnews
Tags:    

Similar News