செய்திகள்

கூடலூர் அருகே முல்லை பெரியாற்றில் கடத்தல் மணல் குவியல்

Published On 2018-05-05 10:24 GMT   |   Update On 2018-05-05 10:24 GMT
கூடலூர் அருகே முல்லை பெரியாற்றில் மணல் கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கூடலூர்:

தேனி மாவட்டம் கூடலூர் அருகே முல்லைப் பெரியாற்றில் இருந்தும் வனப்பகுதி ஓடைகளில் இருந்தும் அரசு அனுமதியின்றி மணல் எடுத்து கடத்தி வருகிறார்கள். சிலர் மணல்களை முல்லைப் பெரியாற்றில் கரை ஓரங்களில் குவியல் குவியலாக அள்ளி பதுக்கி வைக்கிறார்கள்.

அவ்வாறு பதுக்கி வைத்த மணல்களை இரவு நேரங்களில் டிராக்டர் மூலம் கடநத்தி செல்கிறார்கள். ஆறு மற்றும் ஓடைகளில் தொடரும் மணல் திருட்டால் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. இதன் எதிரொலியாக விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.

கூடலூர் குருனூத்து அருகே முல்லைப் பெரியாற்றில் பல்வேறு இடங்களில் கடத்துவதற்காக குவியல் குவியலாக மணல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இவற்றை கடத்துபவர்கள் மீது வருவாய்துறையினரோ, போலீசாரோ இதுவரை நடடிவக்கை எடுக்கவில்லை.

எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மணல் கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News