செய்திகள்

தமிழ்நாட்டிலும் ஏ.டி.எம்.களில் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் காலி - ரிசர்வ் வங்கியில் சப்ளை நிறுத்தம்

Published On 2018-04-26 07:59 GMT   |   Update On 2018-04-26 07:59 GMT
வடமாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சென்னை:

வடமாநிலங்களில் புதிய ரூபாய் நோட்டுக்களுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால் அந்த தட்டுப்பாடு தற்காலிகமானதுதான். 500 ரூபாய் நோட்டுக்கள் அதிக அளவில் அச்சிடப்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏ.டி.எம்.எந்திரங்களில் கடந்த சில நாட்களாகவே ரூ.500, 100 ரூபாய் நோட்டுகள் மட்டுமே வருகிறது.

இதுபற்றி வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, ஏற்கனவே புழக்கத்தில் விடப்பட்டு இருக்கும் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் மட்டுமே சுழற்சியில் சென்று கொண்டிருக்கிறது. ரிசர்வ் வங்கியில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சப்ளை திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

திடீரென்று 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதற்கு காரணம் பலர் பணத்தை பதுக்கி வைத்து இருப்பதாகவும், கர்நாடக தேர்தலுக்காக சென்றுவிட்டது என்றும் பல தகவல்கள் உலா வருகின்றன.

இதற்கிடையில் ரூ.2 ஆயிரம் புதிய நோட்டையும் நிறுத்த மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன.  #RBI #ReserveBank
Tags:    

Similar News