செய்திகள்

ஊட்டி எச்.பி.எப் தொழிற்சாலை நிரந்தரமாக மூடல் - ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு

Published On 2018-04-24 12:50 GMT   |   Update On 2018-04-24 12:50 GMT
உதகமண்டலத்தில் இருக்கும் இந்துஸ்தான் போட்டோ தொழிற்சாலையை நிரந்தரமாக மூடுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. #HindustanPhotoFilms
நீலகிரி:

நீலகிரி மாவட்டம் உதகையில் 1699-ம் ஆண்டு இந்துஸ்தான் போட்டோ தொழிற்சாலை தொடங்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனமான இதில் புகைப்பட சுருள், எக்ஸ்ரே எடுக்க உதவும் பேப்பர் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிய இந்த ஆலையை மூட மத்திய அரசு முடிவெடுத்தது.

படிப்படியாக ஆலையின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது 165 ஊழியர்கள் பணியில் உள்ளனர். இந்நிலையில், ஆலை நிரந்தரமாக மூடப்படுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. அனைத்து ஊழியர்களுக்கும் கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. #HindustanPhotoFilms 
Tags:    

Similar News