செய்திகள்

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு: தலித் முன்னேற்ற கழகம் ராமதாசுக்கு கண்டனம்

Published On 2018-04-24 11:51 GMT   |   Update On 2018-04-24 11:51 GMT
தமிழ்நாட்டில் வன்கொடுமைகளை தினமும் தலித் மக்கள் மீது அறங்கேற்றி வரும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு தலித் முன்னேற்ற கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. #ramadoss
சென்னை:

தலித் முன்னேற்ற கழக தலைவர்கள் செ.அன்பின் பொய்யாமொழி டி.டி.கே.தலித் குடிமகன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் வன்கொடுமைகளை தினமும் தலித் மக்கள் மீது அறங்கேற்றி வரும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், எஸ்.சி.,எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு எதிராக அரசியல் கட்சிகளை திசை திருப்பி அணி திரட்டும் முயற்சியில் அறிக்கை வெளியிட்டு இருப்பதை மிக வன்மையாக கண்டிக்கிறோம்.

வன்கொடுமை தடுப்பு சட்டம் இருந்தும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல மாவட்டங்களில் தலித் மக்களுக்கு எதிராக சாதிய அடக்குமுறை, வன்முறை வெறியாட்டங்கள் பல கிராமங்களில் கட்டவிழ்த்து விடப்பட்டதை நாடு நன்கறியும் என்பதால் ராமதாஸ் தலித் விரோத போக்கை விட வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் உச்ச நீதிமன்ற கருத்திற்கு மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்கின்ற இந்த வேளையில் தலித் மக்களின் வாழ்வுரிமை பிரச்சினையில் தலையிடாமல் இருப்பது ராமதாசுக்கு நல்லது.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.#tamilnews
Tags:    

Similar News