செய்திகள்

கவர்னரை நேரில் சந்தித்து முறையிடுவேன்- ரொபினா

Published On 2018-04-22 02:48 GMT   |   Update On 2018-04-22 02:48 GMT
அன்வர் ராஜா எம்.பி. மகன் திருமண விவகாரம் தொடர்பாக கவர்னரை நேரில் சந்தித்து முறையிடுவேன் என்று வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் ரொபினா தெரிவித்துள்ளார்.
சென்னை:

வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வரும் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த பிரபல்லா சுபாஷ் என்ற ரொபினா நேற்று சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அ.தி.மு.க. எம்.பி.யான அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலி என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். இதையடுத்து 3 ஆண்டுகள் நாங்கள் இரண்டு பேரும் கணவன்-மனைவி போல வாழ்ந்தோம். கடந்த மாதம் 25-ம் தேதி வேறு ஒரு பெண்ணை நாசர் அலி திருமணம் செய்துகொண்டு, என்னை ஏமாற்றிவிட்டார். இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர், ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகார் அளித்தும் நாசர் அலி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

காரைக்குடியில் 4 பிரிவுகளின் கீழ் நாசர் அலி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த வழக்கு சென்னையில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். ஆனால் சென்னையில் எந்த போலீஸ் நிலையம் என்று இதுவரை தெரிவிக்கப்படவில்லை. அன்வர் ராஜா எம்.பி. தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவருடைய மகனை காப்பாற்ற முயற்சிக்கிறார். எனவே நாசர் அலியை கைது செய்யவேண்டும் என்றும், எனக்கு அவரை திருமணம் செய்து வைத்து என் மீது சுமத்தப்பட்ட களங்கத்தை துடைக்கவேண்டும் என்றும் கவர்னரை சந்தித்து மனு கொடுக்க உள்ளேன். ஆனால் எனக்கு கவர்னரை சந்திக்க அனுமதி தர மறுக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News