செய்திகள்

மெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்கும் அபாயம்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Published On 2018-04-20 12:19 GMT   |   Update On 2018-04-20 12:19 GMT
சென்னை மெரீனா கடலில் குளித்தால் பல்வேறு நோய்கள் தாக்கப்பட்டு உடல் நலம் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உள்ளதாக சமீபத்திய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
சென்னை:

சென்னை கடல் நீரில் உள்ள மாசு குறித்து மத்திய கடல் ஆராய்ச்சி மையம் ஆய்வு மேற்கொண்டது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், எண்ணூர், கோவளம் ஆகிய 5 கடற்கரையில் உள்ள மொத்தம் 192 மாதிரிகளை சேகரித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கோடை மற்றும் மழைக் காலங்களில் உள்ள நீரின் மாதிரிகளை சேகரித்து, மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பாக்டீரியா உள்ளிட்ட நுண்கிருமிகள் அதிகரித்து நீர் மாசடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு காரணம், அடையாறு மற்றும் கூவம் ஆறுகளின் வழியாக செல்லும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் தொடர்ந்து கடலில் கலந்து வருவதால் பாக்டீரியாக்கள் அதிகரித்து, கடல் நீர் மாசு அடைந்து உள்ளதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.



இதில் மெரினாவில் சேகரிக்கப்பட்ட நீரில் அதிக அளவிலான பாக்டீரியாக்கள் இருந்தது தெரியவந்துள்ளது. மெரினா கடலில் குளிப்பதால் செரிமான பிரச்சினை, வயிற்றுப் போக்கு, வாந்தி, வயிற்று வலி உள்ளிட்ட உடல் பாதிப்புகள்  ஏற்படுமாம்.

இதேபோல் மற்ற கடற்பகுதியிலும் கழிவுகள் கலப்பதால் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. ஒப்பீட்டு அளவில் கோவளம் கடல் நீரில் குறைந்த அளவு மாசு கலந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. #tamilnews
Tags:    

Similar News