செய்திகள்

ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி - விஜயகாந்த், பிரேமலதா கைது

Published On 2018-04-20 08:33 GMT   |   Update On 2018-04-20 08:33 GMT
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற விஜயகாந்த், பிரேமலதா மற்றும் தே.மு.தி.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை:

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகத்தை சேர்ந்த எம்.கே.சூரப்பாவை ஆளுநர் நியமித்தார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
 
சூரப்பா நியமனத்தை ஆளுநர் திரும்பப்பெற வேண்டுமென தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தினார். அத்துடன் ஆளுநர் தங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால், ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்படும் எனவும் விஜயகாந்த் அறிவித்திருந்தார்.

அதன்படி விஜயகாந்த் தலைமையில் இன்று ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெற்றது. இதில், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதேபோல் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். #tamilnews
Tags:    

Similar News