செய்திகள்

பிறந்த குழந்தைகளின் காது கேளாமையை கண்டறிய 162 மையம்- அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

Published On 2018-04-18 10:36 GMT   |   Update On 2018-04-18 10:36 GMT
பிறந்த குழந்தைகளின் காது கேளாமையை கண்டறிய தமிழ்நாடு முழுவதும் 162 மையங்கள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் நடைபெற்ற விழாவில் காதுவால் நரம்பு உள்வைப்பு கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை மேற்கொண்ட 126 பயனாளிகளுக்கு ரூ.62.47 லட்சம் செலவிலான துணை பாகங்களை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது, 6 வயதுக்கு உட்பட்ட காது கேளாமை நரம்பியல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு காது வால்நரம்பு உள்வைப்பு கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதன் பிறகு குழந்தைகள் பேசவும், கேட்கவும் இயலும். இத்திட்டத்தில் 2968 குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

பிறந்த குழந்தையின் காது கேளாமையை கண்டறியும் நவீன பரிசோதனை கருவியான ஒலி ஒலியியல் கருவியை பயன்படுத்தி கண்டறிய திட்டமிட்டுள்ளோம். தமிழ்நாடு முழுவதும் இதை 162 மையங்களில் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News