செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்வு

Published On 2018-04-18 07:25 GMT   |   Update On 2018-04-18 07:25 GMT
அட்சய திருதியை நாளான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.23,936-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும். வளம் கொழிக்கும் என்பது ஐதீகம். இதனால் கடந்த சில ஆண்டுகளாக அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கும் பழக்கம் மக்களிடம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் அட்சய திருதியை நாளான இன்று தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.112 உயர்ந்துள்ளது. கடந்த 13-ந்தேதி ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 680 ஆக இருந்தது. மறுநாள் (14-ந்தேதி) பவுனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.23 ஆயிரத்து 936-க்கு விற்றது. நேற்று விலை குறைந்து ரூ.23 ஆயிரத்து 824 ஆக இருந்தது.

இன்று பவுனுக்கு ரூ.112 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 936 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.17 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,992-க்கு விற்கிறது.

அட்சய திருதியையொட்டி தங்க நகை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

வெள்ளி ஒரு கிலோ ரூ.300 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.42 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.42.50-க்கு விற்கிறது.
Tags:    

Similar News