செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமையும்- தமிழக ஆளுநர் தகவல்

Published On 2018-04-17 13:37 GMT   |   Update On 2018-04-17 13:37 GMT
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.
சென்னை:

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை ராஜ்பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் காவிரி மேலாண்மை வாரியம், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து ஆளுநர் கூறியதாவது:-

காவிரி விவகாரம் என் இதயத்தில் இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழகத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரத்தை நான் மேலிடத்திற்கு உடனடியாக எடுத்துச் சென்றேன். எப்போதெல்லாம் நான் டெல்லி செல்கிறேனோ அப்போதெல்லாம் நான் காவிரி விவகாரம் குறித்து பேசுகிறேன். இன்றுகூட மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்காரியுடன் பேசினேன். அப்போது மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்காக துணைவேந்தர் நியமனத்தில் பரிந்துரை செய்யப்பட்ட 3 பேரில் அதிக அனுபவம் வாய்ந்தவரை தேர்ந்தெடுத்தோம். எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். சட்டத்தில் இந்த எல்லைக்குள் இருப்பவரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். #TNGovernor #BanwarilalPurohit #CauveryManagmentBoard
Tags:    

Similar News