செய்திகள்

கோவையில் வாகன சோதனையின் போது சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் கைது

Published On 2018-04-17 09:58 GMT   |   Update On 2018-04-17 09:58 GMT
கோவையில் வாகன சோதனையின் போது சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோவை:

கோவை ரத்தினபுரி போக்குவரத்து போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நேற்று இரவு கோவை காந்திபுரம் ராதாகிருஷ்ணன் ரோடு- சத்தி ரோடு சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வாலிபர் வந்தார். அவர் ஹெல்மெட்டில் செல்போனை வைத்து பேசிய படி வந்தார்.

அவரை போலீசார் நிறுத்தினார்கள். அப்போது அந்த வாலிபர் போக்குவரத்து போலீசாரை பார்த்து தன்னை நிறுத்த உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று வாக்குவாதம் செய்தார்.

அவரிடம் போக்குவரத்து போலீசார் உரிய ஆவணங்களை காண்பித்து செல்லுமாறு கூறினர். ஆனால் அந்த வாலிபர் தனது மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு அங்கிருந்து சென்றார். சற்று தூரம் சென்றதும் மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் துணி சிக்கி கொண்டது. இதனால் அந்த வாலிபரால் மேற்கொண்டு செல்ல முடியவில்லை. அவரை போலீசார் மடக்கினார்கள்.

இது குறித்து ரத்னபுரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய மதுக்கரை அய்யப்பன் கோவில் வீதியை சேர்ந்த ஜிகாபுதீன் (25) என்பவரை கைது செய்தனர்.

அவர் மீது தகாத வார்த்தையால் பேசுதல், தாக்குதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் ஆகிய 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News