என் மலர்

  நீங்கள் தேடியது "Sub inspector attack"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மீஞ்சூர் பஜாரில் குடிபோதையில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
  பொன்னேரி:

  மீஞ்சூர் பஜாரில் பெண்களை 4 வாலிபர்கள் கிண்டல், கேலி செய்வதாகவும் வயதான 2 பெண்களை தாக்குவதாகவும் மீஞ்சூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் வந்தது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு சென்றார். போலீசாரை பார்த்ததும் 3 வாலிபர்கள் தப்பிஓடி விட்டனர். ஒருவரை மட்டும் சப்-இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் பிடித்தார்.

  குடி போதையில் இருந்த அந்த வாலிபர் சப்-இன்ஸ்பெக்டரை அசிங்கமாக பேசி கையால் அடித்து தாக்கி கொலை செய்துவிடுவதாக மிரட்டி ஓட முயன்றார். அவரை மடக்கி பிடித்து விசாரித்த போது அவர் சென்னையை சேர்ந்த தீபன் சக்கரவர்த்தி, மீஞ்சூர் அடுத்த காணியம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருவதாக தெரியவந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். #Tamilnews
  ×