செய்திகள்

எஸ்.சி, எஸ்.டி சட்ட தீர்ப்பு விவகாரத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு

Published On 2018-04-17 09:33 GMT   |   Update On 2018-04-17 09:33 GMT
எஸ்.சி, எஸ்.டி சட்டத்தில் திருத்தம் செய்து சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை:

எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சில திருத்தங்களை செய்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்து போகச்செய்யும் வகையில் இருப்பதாக நாடு முழுவதும் தலித் மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.

இந்த போராட்டத்தில் 11-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். இதனை அடுத்து, இந்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையே, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களும் இவ்விவகாரத்தில் மறுசீராய்வு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மூத்த அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட முடிவெடுக்கப்பட்டது. உடனடியாக இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #SCSTAct #TamilNews
Tags:    

Similar News