செய்திகள்

பேராசிரியை விவகாரம் - கவர்னர் விசாரிக்க உத்தரவிட்டது ஏன்? மு.க. ஸ்டாலின் கேள்வி

Published On 2018-04-17 05:46 GMT   |   Update On 2018-04-17 05:46 GMT
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் கவர்னர் விசாரிக்க உத்தரவிட்டது ஏன் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். #MKStalin #ProfessorNirmalaDevi
சென்னை:

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-



கே:- பேராசிரியை நிர்மலாதேவி வி‌ஷயத்தில் விசாரணை நடத்தப்படும் என்று கவர்னர் கூறி இருக்கிறாரே?

ப:- பல்கலைக்கழகத்தில் ஒரு துணைவேந்தர்தான் அங்கிருக்க கூடிய கல்வியாளர்களுக்கு, பேராசிரியர்களுக்கு மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினையை தீர்க்கக்கூடிய தலைவராக உள்ளவர்.

அந்த துணைவேந்தர் தான் முறையாக இதுகுறித்து நடவடிக்கைக்கான முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும். எனவே வேந்தராக இருக்கக்கூடிய கவர்னர் எப்படி அதற்கான முயற்சியில் ஈடுபட்டார் என்று புரியவில்லை. எனவே இதில் குழப்பம் இருப்பதாகவே தெரிகிறது.

அதனால்தான் நேற்று தெளிவாகவே எடுத்து சொல்லி இருந்தேன். உயர்நீதிமன்ற மேற்பார்வையில் இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும் என்பது என்னுடைய கருத்து.

கே:- தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்சினைகளுக்காக இன்னும் போராட்டங்கள் அதிகரித்து வருகிறதே?

ப:- இன்னும் சிறிது நேரத்தில் தீரன் சின்னமலை சிலைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவிக்க வருகிறார். அவரிடம் இந்த கேள்வியை கேளுங்கள். அதற்கு அவர் பதில் சொல்லட்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #MKStalin #ProfessorNirmalaDevi
Tags:    

Similar News