செய்திகள்

போடி அருகே விவசாயியிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த வாலிபர்

Published On 2018-04-12 12:00 GMT   |   Update On 2018-04-12 12:00 GMT
போடி அருகே விவசாயியிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தேனி:

போடி தாலுகா சிலமலை பழைய நூலகத் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (81) விவசாயி. இவரிடம் உத்தமபாளையம் தாலுகா சீப்பாலக்கோட்டையைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (வயது 29) என்பவர் தான் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி தொழில் செய்து வருவதாகவும் என்னிடம் நீங்கள் பணம் கொடுத்தால் நான் உங்களையும் தொழில் பங்குதாரராக சேர்த்துக் கொள்கிறேன். இதன் மூலம் பல மடங்கு வருமானம் வரும் என்று ஆசை வார்த்தை கூறினார்.

இதனை நம்பி சுப்பிரமணி நவநீதகிருஷ்ணனிடம் பல்வேறு தவணைகளில் ரூ.30 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் நவநீதகிருஷ்ணன் ஏற்றுமதி தொழில் செய்யாமல் சுப்பிரமணியை ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து தெரியவரவே பல முறை கேட்டபோதும் நவநீத கிரு‌ஷணன் கொடுத்த பணத்தை திருப்பித் தரவில்லை.

எனவே சுப்பிரமணி தேனி போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் செய்தார். இது குறித்து விசாரிக்க மாவட்ட குற்றப்பிரிவுக்கு எஸ்.பி. உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி பணம் மோசடி செய்த நவநீதகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News