செய்திகள்

சூலூரில் ரோட்டை கடக்க முயன்ற ஆசிரியையிடம் நகை பறிப்பு

Published On 2018-03-27 11:05 GMT   |   Update On 2018-03-27 11:05 GMT
சூலூரில் ரோட்டை கடக்க முயன்ற ஆசிரியையிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூலூர்:

சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூர் சந்தான லட்சுமி நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். ஓய்வு பெற்ற தாசில்தார். இவரது மனைவி கோமளவல்லி (52). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலைப்பார்த்து வருகிறார்.

நேற்று மாலை பள்ளி முடிந்து இவர் பஸ்சில் வீடு திரும்பினார். மாலை 6 மணியளவில் பாப்பம் பட்டி பகுதியில் பஸ்சில் இருந்து இறங்கி ரோட்டை கடக்க முயன்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென ஆசிரியை கோமளவல்லி கழுத்தில் கிடந்த 4½ பவுன் நகையை பறித்து கொண்டு சென்றனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கோமளவல்லி அவர்களை பின்தொடர்ந்து சத்தம் போட்டுக்கொண்டே விரட்டி சென்றார். அப்போது அவர் கீழே விழுந்து காயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News