செய்திகள்

ரூ.44.15 கோடியில் புதிய ரெயில்வே மேம்பாலத்தை முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்

Published On 2018-03-26 04:56 GMT   |   Update On 2018-03-26 04:56 GMT
பள்ளிபாளையத்தில் ரூ.44.15 கோடியில் கட்டப்பட்ட புதிய ரெயில்வே மேம்பாலத்தை இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.
பள்ளிப்பாளையம்:

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் எஸ்.பி.பி.காலனியில் ரூ.44.15 கோடியில் புதிதாக ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா, வெப்படை புதிய போலீஸ் நிலையம் தொடக்கவிழா மற்றும் காவிரி ஆர்.எஸ். பகுதியில் புதியபாலம் அடிக்கல் நாட்டுவிழா இன்று மாலை 4 மணி அளவில் பள்ளிபாளையம் எஸ்.பி.பி.காலனியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.

இந்த விழாவுக்கு தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி தலைமை தாங்குகிறார். மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வரவேற்று பேசுகிறார். தமிழக சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, செல்வக்குமார சின்னையன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, புதிதாக கட்டப்பட்டு உள்ள ரெயில்வே மேம்பாலத்தை திறந்து வைக்கிறார். வெப்படையில் புதிய போலீஸ் நிலையத்தை தொடங்கி வைக்கிறார். ரூ. 22.15 கோடி செலவில் கட்டப்பட உள்ள காவிரி ஆர்.எஸ். கீழ் பாலத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் 700 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இந்த விழாவில் ரூ. 21.89 கோடி மதிப்பில் திருவண்ணாமலை - தியாகதுருகம் சாலையில் மணலூர் பேட்டையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டுள்ள உயர் மட்ட ஆற்றுப்பாலத்தை திறந்து வைக்கிறார்.

ரூ. 21.25 காடி மதப்பில் விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் திருத்துறையூர் - பண்ருட்டி ரெயில்வே கடவுக்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலத்தையும் திறந்து வைக்கிறார்.

ரூ. 146.39 கோடி மதிப்பில் திருச்செங்கோடு - பரமத்திவேலூர் இடையே மேம்படுத்தப்பட்டுள்ள புதிய தார்சாலையையும் முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.

இவ்விழாவில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், கே.சி.கருப்பண்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் எம்.பி.க்கள் சுந்தரம், செல்வக்குமார சின்னையன், எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், சந்தரசேகரன், பொன். சரஸ்வதி, ராமலிங்கம், தென்னரசு, மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.

முதலமைச்சரை வரவேற்கும் வகையில் பள்ளிபாளையம் நகரில் கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு உள்ளன. விழா மேடையும் பிரமாண்டமான முறையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. #tamilnews
Tags:    

Similar News